26th October 2021

சீர்காழி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்!

சீர்காழி:
தமிழகத்தில் நேற்று நடந்த 3&வது மாபெரும் தடுப்பூசி முகாமில் இலக்கை தாண்டி 18¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சீர்காழியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட வள்ளுவக்குடி, செம்பதனிருப்பு உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நேற்று நடந்த 3வது முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 53 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 53 ஆயிரத்து 210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகம் முழுவதும் இதுவரை 500 ஊராட்சிகள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவகல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், பொது சுகாதார துறை இயக்குனர் செல்வநாயகம், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன், துணை இயக்குனர் பிரதாப், சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி, உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக், சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page