மயிலாடுதுறையில் பாரம்பரிய அடையாள சின்னமாக விளங்கும் மணிக்கூண்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயங்கும் கடிகாரம்!

மயிலாடுதுறை கடைவீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு 1943-ம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாநில ஆளுனர் ஹோப் என்ற வெள்ளைக்காரரால் திறந்து வைக்கப்பட்டது.

உலக போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன் முறையாக டுனீசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் நினைவு சின்னமாக மயிலாடுதுறை மணிக்கூண்டை அப்துல்காதர் என்பவர் கட்டினார். அதன்பின்னர் மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களின் ஓன்றாக இந்த மணிக்கூண்டு மாறிவிட்டது. அந்த காலத்தில் இந்த மணிக்கூட்டில் உள்ள கடிகாரத்தை பார்த்தே மக்கள் நேரத்தை தெரிந்து கொண்டனர்.

இதில் உள்ள கடிகாரம் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்தது. இதுதொடர்பாக பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அந்த பகுதி 16-வது வார்டு தி.மு.க. நகரசபை உறுப்பினரான 23 வயது பட்டதாரி இளைஞரான சர்வோதயன், தனது சொந்த செலவில் மணிக்கூட்டில் உள்ள கடிகாரத்தையும், மணிக்கூண்டில் பல ஆண்டுகளாக எரியாமல் இருந்த மின் விளக்கையும் சரி செய்து கொடுத்துள்ளார்.

தற்போது கடிகாரம் நன்கு இயங்குகிறது. மின் விளக்கும் நன்கு எரிகிறது. 16-வது வார்டு நகரசபை உறுப்பினரின் இந்த செயலை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page