3rd December 2021

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின், மூத்த சகோதர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர். 104 வயதான இவர், ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

வயது மூப்பின் காரணமாக இவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இவரது உடல் ராமேஸ்வரம் பள்ளிவாசல் அருகே உள்ள இடத்தில் இன்று (மார்ச் 8, திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் அடக்கம் செய்யப்படவுள்ளது என அவரது பேரன் தெரிவித்துள்ளார்.

கலாமின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், தவறாமல் சென்று மரியாதை செலுத்துவதுடன், சிறப்பு பிரார்த்தனைகளிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பதவி வகித்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம், விண்வெளி, அறிவியல், நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகளை படைத்திருந்தார். மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மாணவர்களிடையே உரையாற்றுகையில் அவர் திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார்.

இதையடுத்து, அப்துல் கலாமின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பேக்கரும்பில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு பின் அந்த இடத்தில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வருபவர்கள் கலாமின் வாழ்க்கை வரலாற்றுக் காட்சிக் கூடம், அவர் உருவாக்கிய விண்வெளி சாதனங்கள், அவர் பெற்ற விருதுகள் ஆகியவை அங்கு வைக்கபட்டடுள்ளது.

Source: BBC Tamil

More News

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

You cannot copy content of this page