1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி முதல் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி முதல் 13-ம் தேதிக்குள் இறுதித் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நேற்றையதினம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறையானது அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எந்த இடை நிற்றலும் இல்லாமல் முழுமையாக தேர்ச்சி வழங்கப்படும் என்று பல்வேறு செய்தித்தாள்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளி கல்வித்துறை, திட்டமிட்டபடி மே 6-ம் தேதி முதல் இறுதி தேர்வுகள் தொடங்கும் என அறிவித்துள்ளது.

குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வித்திறன் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் காரணமாக தொடர்ச்சியாக இல்லம் தேதி கல்வி ஆகியவை மூலமாக மாணவர்களுக்கு நேரில் சென்று அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது.

இருப்பினும் ஏற்கனவே இருக்க கூடிய கட்டாயக்கல்வி சட்டத்தின் படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இருப்பினும், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள கூடிய திறன் அவர்களுக்கு குறைந்து போய்விட கூடாது என்பதற்காக இந்த தேர்வானது நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறையானது தகவல் தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி மே 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அந்த இறுதி தேர்வானது தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள கூடிய திறனை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற பொது தேர்வுகள் நடைபெறும் என்று, அதேபோல் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும்,1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வும் நிச்சயம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page