25th January 2022

ஆசிட் கேனை வெட்டிய இளைஞர் வெடித்து சிதறினார்..! ஆசிட் வெடிக்க இதுதான் காரணம்..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம் பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி . இவர் காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் ஆக்கூர் கூட்டு ரோடு சந்திப்பு பகுதியில், ஜாலி சிமெண்ட் வொர்க்ஸ் தொழில் செய்து வருகிறார். இங்கு மகாஜனம்பாக்கம் கிராம காலனியைச் சேர்ந்த சுகுமார் என்பவர் பெயின்டராக வேலை பார்த்து வந்தார்.

இவர் வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மதிய வேளையில் கடையின் ஓரமாக பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலாவதியான ஆசிட் கேனைத் திறக்க முயன்றார்.

அந்த கேனில் இருந்த ஆசிட் கட்டியாகி திறக்க இயலாத நிலையில் காணப்பட்டது. இதையடுத்து சிறிய கத்தி மூலம் வெட்டி திறக்க முயன்றார். அப்போது திடீரென ஆசிட் கேன் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் தூக்கி வீசப்பட்ட சுகுமார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிதைந்து கிடந்த சுகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

முதல் கட்ட விசாரணையில், சுகுமார் கத்தியால் வெட்டிய பிளாஸ்டிக் கேனில் இருந்த ஆசிட் கட்டியானாலும், அதன் வீரியம் கியாஸ் போல கேனில் நிறைந்து இருந்துள்ளது. மூடியைத் திறக்க முடியாமல் போனதால் அதனை வேகமாக வெட்டியதும் அதில் இருந்த கியாஸ் வெடித்துச் சிதறியதில் சுகுமாரின் உடலும் சிதறிப்போனதாகவும், பல மாதங்களாக எதற்கும் பயனற்ற பொருளாய் கிடந்த ஆசிட் கேனை பயன்படுத்த நினைத்து வெட்டியதால் இந்த விபரீத விபத்து நிகழ்ந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page