திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் காலசம்ஹார ஐதீக விழா 

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் காலசம்ஹார ஐதீக விழா பக்தர்களின்றி எளிமையாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்  பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலமாகும். மேலும், அபிராமி பட்டர் அந்தாதி பாடி அரசனுக்கு அமாவாசையை பெளர்ணமியாக்கி காட்டிய நிகழ்வு நடைபெற்ற தலம் என்னும் சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு. சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் புரிந்த தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். எமனை காலால் எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்த திருத்தலமும் இதுவாகும். இதை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார திருவிழா நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டு இவ்விழா ஏப்ரல்  மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டிய விழாவானது  கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நிகழாண்டு காலசம்ஹார மூர்த்தி விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் காலசம்ஹார மூர்த்தி ஐதீக விழா தடைபடக்கூடாது என்பதால் பக்தர்கள்  யாரும் இன்றி மிக எளிமையாக நடைபெற்றது.

காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர்,   தருமபுர ஆதீனம்  27 வது குருமகா சந்நிதானம்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் காலனை வதம் செய்யும் காலசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியில் மிகக்குறைவான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம்.

செய்தி: ராஜா யோகுதாஸ், மயிலாடுதுறை

More News

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

கமலின் கட்சி நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி…

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page