25th September 2021

திருவாரூர்: கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி அறிவிப்பு மாணவிகள் மகிழ்ச்சி!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படுவதாக தமிழக அரசால் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்ட மாணவிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக சட்டப் பேரவையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டமும் இடம் பெற்றுள்ளது.

கூத்தாநல்லூர் வட்டத்தில், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், கமலாபுரம் மற்றும் 55 கிராமங்கள் உள்ளன. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் 500க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் பெரும் பயன் அடைவார்கள்.

கூத்தாநல்லூர், பூதமங்கலம், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட ஊர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். கூத்தாநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மேல் படிப்பு படிப்பதற்காக, தனியார் கல்லூரிகளைத் தேடி மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம், திருச்சி, சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்குத்தான் செல்ல வேண்டிய நிலை நிலவி வருகிறது.

கூத்தாநல்லூரில் புதிதாக அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட உள்ளது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மாணவிகள் பேசும்போது. “சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூரில் தமிழக அரசு மகளிர் கல்லூரி அமைப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page