இது பெரியார் பூமி பாஜகவின் வேலைகள் இங்கே பலிக்காது.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு



இது பெரியார் பூமி பாஜகவின் வேலைகள் இங்கே பலிக்காது, திராவிட முன்னேற்ற கழகம் என்றும் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் ஆடிட்டோரியத்தில் திருவல்லிக்கேணி இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மாஸ்தான், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆன உறவு கழகம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து கொண்டிருக்கிறது. 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், அரசியலை தாண்டிய ஒரு கொள்கை உறவு.