3rd December 2021

தரங்கம்பாடி தாலுக்காவில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி

தரங்கம்பாடி தாலுக்காவில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், மேலும் 144 தடை உத்தரவை மீறியதாக 40 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தரங்கம்பாடி தாலுக்கா முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரையும் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், மேலும் நாகை மாவட்டம் பூம்புகார், பொறையார், செம்பனார்கோவில், பெரம்பூர், பாலையூர் காவல் நிலைய சரக பகுதியில் 144 தடை உத்தரவை மீறிய நபர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், கடந்த இரண்டு நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக சுமார் 44 நபர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தடை உத்தரவை மீறி செல்வோர்களை தொடர்ந்து எச்சரித்தும் வருகின்றனர்.

இரா.யோகுதாஸ்

Leave a Reply

You cannot copy content of this page