3rd December 2021

மூன்றாயிரம் இலவச டோக்கன்கள்:திருப்பதியில் பொதுமக்கள் சாமி தரிசனம்

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பக்தர்களுக்கான சாமி தரிசனம் 83 நாட்களுக்குப்பின் இன்று துவங்கியது. இந்த மாதம் எட்டாம் தேதி முதல் ஏழுமலையான் கோவிலில் பரிசோதனை அடிப்படையில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு வழங்க ஆந்திர மாநில அறநிலையத்துறை அனுமதி அளித்திருந்தது.

அதனடிப்படையில் கடந்த 8,9,10 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் உள்ளூர் மக்கள் ஆகிய 21 ஆயிரத்து 500 பேர் பரிசோதனை அடிப்படையிலான முறைகளில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை பின்பற்றி ஏழுமலையானை வழிபட்டனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் வழிபடும் வகையில் நாளொன்றுக்கு மூன்றாயிரம் என்ற கணக்கில் ஆன்லைனில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட தேவஸ்தானம், திருப்பதியில் உள்ள சர்வ தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்றாயிரம் என்ற கணக்கில் இலவச தரிசனம் டோக்கன்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சுப்ரபாதம்,தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகளுக்கு பின் மிகக் குறைந்த எண்ணிக்கையான பக்தர்கள் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டனர்.

தொடர்ந்து 300 ரூபாய் டிக்கெட் வாங்கிய பக்தர்கள், இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் ஆகியோர் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசு மற்றும் தேவஸ்தானம் ஆகிய விதித்துள்ள கொரோனா பரவலுக்கு எதிரான நடைமுறைகளை பின்பற்றி ஏழுமலையானை வழிபட்டு வருகின்றனர்.

 

source

More News

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page