3rd December 2021

மயிலாடுதுறையில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்!

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம அளவில் நாளை 27.10.2021-ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 2014 முதல் 2016 வரை தமிழ் நிலம் மென்பொருளில் கிராம கணக்குகள் பதிவேற்றம் செய்த போது ஏற்பட்ட பிழை திருத்தங்கள் (கணினி பிழைகள் மட்டுமே) சரி செய்ய கிராமம் தோறும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

உட்பிரிவு எண், புல எண் தவறாக இருந்தால் , பரப்பு திருத்தம், பட்டாதாரர் பெயர் அல்லது தந்தை பாதுகாவலர் பெயர் திருத்தம், பட்டாவில் உள்ள கலங்கள் காலியாக குறிப்பிட்டுள்ள இனங்கள் பரப்பு பட்டாதாரர் பெயர் மாறி இருப்பது தொடர்பாக இன்று முதல் 27.10.2021 தேதி மயிலாடுதுறை வட்டத்தில் திருச்சற்றம்பலம், கடலங்குடி, முடிகண்டநல்லூர் ஆகிய கிராமங்களிலும், குத்தாலம் வட்டத்தில் ஆலங்குடி, திருமணஞ்சேரி, வில்லியநல்லூர் ஆகிய கிராமங்களிலும் , சீர்காழி வட்டத்தில் மாதிரிவேலூர் வடரெங்கம், அகரஎலத்தூர் , கீழ்மாத்தூர் ஆகிய கிராமங்களிலும் தரங்கம்பாடி வட்டத்தில் கஞ்சாநகரம், மேலையூர், கருவாழக்கரை லெட்சுமிநாராயணபுரம்-1, லெட்சுமிநாராயணபுரம் -2, நடுக்கரை கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேலும் வரும் 29.10.2021 அன்று மயிலாடுதுறை வட்டத்தில் மணல்மேடு, கிழாய், கேசிங்கன் ஆகிய கிராமங்களிலும், குத்தாலம் வட்டத்தில் வானாதிராஜபுரம், கடலங்குடி ஆகிய கிராமங்களிலும், சீர்காழி வட்டத்தில் அத்தியூர், ஓலையம்புத்தூர் , குன்னம், சோதியக்குடி ஆகிய கிராமங்களிலும் , தரங்கம்பாடி வட்டத்தில் கீழையூர், கிடாரங்கொண்டான், தலையுடையவர்கோயில் பத்து ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இம்முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

More News

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

You cannot copy content of this page