8th December 2021

தமிழகம் முழுக்க டோல்கேட் கட்டணம் உயர்கிறது!

தமிழகத்தில், மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது என தேசியநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை – பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை – தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் – குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் – திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இது புதிய விதிமுறை அல்ல. அதிகபட்சமாக 8 சதவீதம் வரை கட்டணம் உயரும் என எதிர்பார்க்கிறோம். கட்டணஉயர்வு குறித்த அறிவிப்பை தேசியநெடுஞ்சாலைத் துறை அடுத்த வாரம் வெளியிடும்” என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் கூறும்போது, “சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு, வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்களும் அவதிப்படுகின்றனர்.

எனவே, தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும், நெடுஞ்சாலைகளில் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும், சுங்கச்சாவடிகளில் தமிழர்களையும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசிடம் விரைவில் மனு அளிக்கவுள்ளோம்” என்றார்.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page