23rd January 2022

மயிலாடுதுறை அருகே மதுபான கடை தகராறில் இருவர் மண்டை உடைப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட குமாரமங்கலம் காவல் சோதனை சாவடி அருகே உள்ள டாஸ்மாக் அரசு மதுபானக்கடையில் கழனிவாசலை சேர்ந்த ராஜாராமன்(31) மது அருந்தச் சென்றுள்ளார். அங்கு அவருக்கும், மாப்படுகையை சேர்ந்த விஜய் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர்.

அப்போது அங்கு வந்த ராஜாராமனின் தம்பி அருண்பாண்டியன் சமாதானம் பேசி விலக்கி விட்டுள்ளார். இருவருக்கும் மீண்டும் சண்டை வரவே கீழே கிடந்த பாட்டிலால் அருண்பாண்டியன் மற்றும் ராஜாராமனை விஜய் தாக்கியுள்ளார். இதில், அருண்பாண்டியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தகவலறிந்து திரண்ட அருண்பாண்டியனின் நண்பர்கள் விஜய்யை துரத்திச் சென்றுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக விஜய் குமாரமங்கலம் சோதனைச் சாவடியில் தஞ்சமடைந்துள்ளார். ஆனால் விடாமல் அங்கும் துரத்திச்சென்ற அருண்பாண்டியன் தரப்பினர் விஜய்யை வெளியில் விடக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெரம்பூர் போலீசார் விஜய்யை காவல்நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்ற போது, போலீசாரின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் அருண்பாண்டியன் அவரது அண்ணன் ராஜாராமன் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வந்தவர்கள் தங்களை உள்நோயாளியாக அனுமதிக்கவில்லை என்றும் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறி மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் பேசி சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதித்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page