தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்த உதயநிதி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்சாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார்.

தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக இந்த முறை ஆட்சியமைக்கிறது. வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்துக்களையும் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக திமுக வெற்றி குறித்து விஜயகாந்த் தனது ட்விட்டரில், “சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page