26th October 2021

இன்று முதல் மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை: கொடியசைத்து துவக்கி வைத்தார் எம்.பி ராமலிங்கம்!

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை (06413) இன்று முதல் தொடங்கியது. இந்த ரயில் மயிலாடுதுறையில் காலை 6.30க்கு புறப்பட்டு காலை 9.45க்கு திருச்சி சென்றடையும். அதேபோல், மீண்டும் மாலை 6.15க்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். கொரோனா காரணமாக அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்ட நிலையில் குறிப்பிட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மட்டும் மீண்டும் துவக்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் ரயில்வே அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு 12 பெட்டிகளுடன் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் துவங்கியது. காலை 5.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட பாசஞ்சர் ரயிலுக்கு பதிலாக இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பாசஞ்சர் ரயிலாக ஓடிக்கொண்டிருந்தபோது ரூ.45க்கு வழங்கப்பட்ட சேவை, சிறப்பு எக்ஸ்பிரஸாக மாற்றப்பட்ட பிறகு ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள ரயில் பயனாளர்கள் மீண்டும் இந்த ரயிலை பாசஞ்சர் ரயிலாக மாற்றி, கட்டணத்தைக் குறைப்பதுடன், அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்திச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு திருச்சிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதற்கு வரவேற்புத் தெரிவித்து மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திமுக, வர்த்தக சங்கம் மற்றும் சேவைச் சங்கத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும், ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page