20th September 2021

வாகனங்களை இயக்குவதற்கு குழந்தைகளை அனுமதிக்காதீர்; பெற்றோருக்கு ஆர்.டி.ஓ வேண்டுகோள்

வாகனங்களை இயக்க குழந்தைகளை அனுமதிக்காதீர் என பெற்றோருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீர்காழி மணிக்கூண்டு அருகே வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் தலைமை வகித்தார் . முன்னாள் லயன்ஸ் சங்க ஆளுநர் கியான் சந்த் ஜெயின், சப் – இன்ஸ் பெக்டர் ராஜா, சிறப்பு சப் – இன்ஸ் பெக்டர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் வரவேற்றார். மோட்டர் வாகன ஆய்வாளர் ராம்குமார் வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டும் பணியை துவக்கி வைத்து பேசுகையில்,

உயிர் விலைமதிக்க முடியாதது. எனவே வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்க பெற்றோர்கள் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது. குடித்துவிட்டு வாகனம் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வாகனங்களுக்கு தொடர்ந்து முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டும் பணியில் ஈடுபட்டனர். இதில் சீர்காழி சங்கம சேவை சங்கம் நிர்வாகிகள் தில்லை நடராஜன், முத்துராமலிங்கம் பாலசுப்ரமணியன் ராஜேந்திரன் வள்ளியப்பன் கோபி வேல்முருகன் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You cannot copy content of this page