8th December 2021

ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கிய வி.ஜி.கே.பாசறை

காரைக்கால் அம்பகரத்தூர் சகாயமாதா இல்லத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு விஜிகே பாசறை சார்பில் தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன.

காரைக்காலிலிருந்து குழந்தைகள் பேருந்து மூலம் மயிலாடுதுறையில் உள்ள முன்னனி ஜவுளி நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு விஜிகே பாசறை சார்பில் புத்தாடைகளை விஜிகே மணி வழங்கி சிறப்பித்தார்.

மேலும், குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டு காரைக்காலிலுள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆதரவற்று வாழ்ந்து வரும் எங்களையும் அரவணைத்து, மகிழ்வித்த விஜிகே மணிக்கு குழந்தைகள் கண்கலங்கி நன்றி கூறினர்.

கடவுள் உள்ளமே… ஓர் கருணை இல்லமே… அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ… தந்தையில்லை… தாயுமில்லை… தெய்வமின்றி யாரும் இல்லை..! என குழந்தைகள் மன நிறைவோடு பாடிச் செல்ல பாதை வகுத்துக் கொடுத்த விஜிகே பாசறைக்கு மயிலைகுரு குழுவின் சார்பில் பாராட்டுக்கள்!

Leave a Reply

You may have missed

You cannot copy content of this page