25th January 2022

கிராமத்து ஸ்டைலில் பரங்கிக்காய் சட்னி ரெசிபி…

பரங்கிக்காய் குளிர்ச்சியானதாக இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். கிராமங்களில் பித்தம் போக இதைதான் உண்ணுவார்கள். இது நன்றாக பசியை தூண்டும். மூல நோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். அந்த வகையில் கிராமத்து ஸ்டைலில் பரங்கிக்காய் சட்னி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் – ஒரு துண்டு

காய்ந்த மிளகாய் – 4

உளுந்து – கால் கப்

சீரகம் – ஒரு தேக்கரண்டி

 பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி

புளி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

இதோ ரெசிபி..முதலில் பரங்கிக்காயின் தோலை நன்கு சீவி எடுத்து அலசி விட்டு நறுக்கிக் கொள்ளவும். பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நறுக்கின பரங்கிக்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். கடைசியாக புளி, பெருங்காயம் சேர்த்து லேசாக வதக்கி ஆற வைக்கவும்> பின்னர் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

இப்போது சுவையான பரங்கிக்காய் சட்னி ரெடி.. இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா ஆகியவற்றிற்கு தொட்டு கொண்டால் நன்றாக இருக்கும். பரங்கிகாயை அதிகம் வதக்கினால் அதில் இருக்கும் தாது சத்துக்கள் அழியும் அதனால் அதனை லேசாக வதக்கினால் போதும்

 

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page