26th October 2021

சங்கரன்பந்தல் கடை வீதியில் விசலூர் கிராம மக்கள் புதிய கட்டிடத்தில் அரசு நியாய விலை கடையை இயங்க வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, விசலூரில் கிராம நியாய விலை கடைக்கு என புதிய கட்டிடம் கடந்த ஆட்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையிலும் அங்கு நியாய விலை கடை செயல்படாமல் சேந்தமங்கலத்தில் உள்ள பழைய தனியார் வாடகை கட்டிடத்திலேயே செயல்படுவதாகவும் விசலூர், பத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் விசலூர் கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று பொருள்கள் பெற முடியாத நிலை உள்ளதாகவும், நியாய விலை கடைக்கென்று புதிய கட்டிடம் விசலூரில் கடந்த ஆட்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.பவுன்ராஜ் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்டு இரண்டு மாத காலங்கள் வரை பயன்பாட்டில் இருந்த கட்டிடம் ஆட்சி மாற்றத்தால் அந்த கட்டிடத்தில் செயல்படாமல் சேந்தமங்கலத்தில் தனியார் இடத்தில் நியாய விலை கடை செயல்படுவதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் விசலூர் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் சங்கரன்பந்தல் கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசலூர் கிராம மக்கள் அரசு உயர் அதிகாரிகள் வராததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ் குமார் மற்றும் பொறையார் காவல் துறையினர் விசலூர் மற்றும் பத்தாம் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்திய மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மங்கைநல்லூரில் இருந்து பொறையார் செல்லும் முக்கிய சாலை சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page