மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

மயிலாடுதுறை நகராட்சி 34-வது வார்டு பட்டமங்கல புதுத்தெரு, ஸ்ரீநகர் காலனி பகுதியில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணான்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைமேடையும், அருகாமையில் பூங்காவும் அமைக்குமாறு அந்த பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் இக்குளத்தை சுற்றிலும் நகராட்சி சார்பில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவருடன் கழிவறை, குடிநீர், கண்காணிப்பு கேமரா, மின்விளக்கு வசதியுடன் நடைமேடை மற்றும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பாலு, நகரசபை துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர துணை செயலாளர் ஆர்.கே.சங்கர், டாக்டர் கிரஹாம் டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

மழையால் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

admin See author's posts

You cannot copy content of this page