8th December 2021

லிப்ட் கேட்டு சென்றபோது, கடத்துவதாக கருதி ஆட்டோவிலிருந்து குதித்து காயமடைந்த மாணவி உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் அவ்வூரில் செயல்பட்டுவந்த பள்ளி மூடப்பட்டதால், 5 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வந்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் ஜூலை 23-ம் தேதி சத்துணவுக்கு பதிலாக பள்ளியில் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவ்வழியே வந்த சுமை ஆட்டோவை நிறுத்தி, மாணவ, மாணவிகளை அவர்களது ஊரில் இறக்கிவிடுமாறு சுமை ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகரன்(36) என்பவரிடம் கூறி, அவர்களை வாகனத்தின் பின் பக்கம் ஏற்றிவிட்டுள்ளனர்.

அக்குழந்தைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சுமை ஆட்டோ, உசிலம்பட்டி கிராமத்தில் நிற்காமல் கடந்து சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, வாகனத்தின் பின்புறம் உட்கார்ந்திருந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டும் சரக்கு வாகனம் நிற்காததால், தங்களை வாகன ஒட்டுநர் கடத்திச் செல்வதாக நினைத்து பயந்து சில மாணவ, மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்திலிருந்து கீழே குதித்தனர்.

இதில் 7-ம் வகுப்பு மாணவிகள் ரம்யா(13), சசிரேகா(13), சரண்யா(10), கலைவாணி(13) ஆகிய 4 மாணவிகள், மாரிமுத்து(13) என்ற மாணவன் என மொத்தம் 5 பேர் காயமடைந்தனர். மாணவ, மாணவிகளின் அலறல் சப்தத்தைக் கேட்டு வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர் ராஜசேகரன், காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் ஏற்றி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இச்சம்பவம் தொடர்பாக செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாபநாசம் வட்டம் காவலூரைச் சேர்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகரனை கைது செய்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவிகளில் ஒருவரான சசிரேகா(13) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இழப்பீடு வழங்க கோரிக்கை:

சுமை ஆட்டோவில் இருந்து குதித்த இக்குழந்தைகள் அனைவரும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சசிரேகா என்ற மாணவி சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். ரம்யா என்ற மாணவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த குழந்தைகளின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவர்களது குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், உசிலம்பட்டி கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page