தரம் உயர்த்தப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் யார்?

கும்பகோணம்: கடந்த 1866 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கும்பகோணம் நகராட்சி 4 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதனால், வார்டுகளின் எண்ணிக்கையும் 45லிருந்து 48ஆக உயர்ந்தது. கும்பகோணம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது.

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் நகராட்சியில் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக வென்றது.

எனவே, மாநகராட்சியின் முதல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக ஈடுபட்டது. திமுக கூட்டணியில் திமுக 39 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு வார்டிலும் போட்டியிட்டது.

இதில் திமுக 37 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு வார்டிலும் என திமுக கூட்டணி மொத்தம் 42 வார்டுகளில் கைப்பற்றியது. ஆனால், 47 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக 3 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. தவிர, சுயேச்சை 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை திமுக பிடித்துள்ளது. இப்போது, இந்த முதல் மேயர் பதவியைப் பெற திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது.

சுப. தமிழழகன்:திமுகவின் கும்பகோணம் மாநகரச் செயலராக உள்ள சு.ப. தமிழழகன் 26-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் நகர் மன்றத் தலைவராக இருந்தார். இதன் பின்னர் 2011ஆம் ஆண்டில் நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவரது தாயார் மதுரம் பத்மநாபன் முன்பு கும்பகோணம் நகர்மன்றத் தலைவராக இருந்தவர். இவரது தந்தை பத்மநாபன் திமுக நகரச் செயலராகப் பதவி வகித்தவர். முதல் மேயர் பதவிக்கு தமிழழகனின் பெயர் பரிசீலனையில் உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி சு.ப. தமிழழகனுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இரா. அசோக்குமார்:இதேபோல, 31-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா. அசோக்குமாரும் கும்பகோணத்தின் முதல் மேயர் பதவியைப் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் திமுகவில் கும்பகோணம் தெற்கு ஒன்றியச் செயலராக உள்ளார். இவர் ஏற்கெனவே தாராசுரம் பேரூராட்சித் தலைவராக இருந்துள்ளார். கும்பகோணம் மாநகராட்சி விரிவாக்கத்தின்போது, தாராசுரம் இணைக்கப்பட்டதால், தற்போது மேயர் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி அசோக்குமார் கும்பகோணம் ஒன்றியக் குழுத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். ஏற்கெனவே மனைவி ஒன்றியக் குழுத் தலைவர் இருக்கும்போது, இவருக்கு மேயர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வியும் தொண்டர்களிடையே நிலவுகிறது. என்றாலும், மேயர் பதவியைப் பெறுவதற்காக ஆதரவாளர்களையும் திரட்டி வருகிறார்.

ஆனால், கும்பகோணம் மேயர் பதவி யாருக்கு என்பதைக் கட்சி மேலிடம்தான் முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என்கின்றனர் திமுகவினர்.

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page