22nd January 2022

மிஸ்டர் இந்தியா கனவு மிஸ்ஸாகிவிடுமோ? தகுதி இருந்தும் தவிப்பில் நிற்கும் மயிலாடுதுறை முத்துக்குமார்!

அரசு பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை முடித்த மகனை, கல்லூரிக்கு அனுப்ப ஏழை பெற்றோருடன் வசதி இல்லை. அதனால் படிப்பை தொடர முடியாத முத்துக்குமார் கேபிள் ஆபரேட்டர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தார். இந்த வருமானத்தை வைத்து தனியார் கல்லூரியில் பி.டெக், படித்தார். கேபிள் வேலையில் கிடைத்த வருமானம் போக்குவரத்திற்கு போதவில்லை. அதனால் கிடைக்கும் மற்ற வேலைகளை செய்து தான் கல்வி கட்டணத்தை கட்டினார்.

காலையில் பழைய சோறு, மதியம் உணவு கிடையாது, இரவு கொஞ்சம் சுடுசோறு, முத்துக்குமாரின் வீட்டில் அவ்வளவுதான் அன்றாட உணவுப் பழக்கம். இந்த வறுமைச் சூழலில் படித்து பட்டம் பெற்று நல்ல வேலைக்கு போக வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு இளைஞருக்கும் கனவாக இருக்கும்? ஆனால் முத்துக்குமாரின் கனவு அதுவல்ல. மிகச் சிறந்த ஆணழகனாக வேண்டும் என்பதுதான் அவரது வைராக்கியம்.

மற்றவர்கள் எல்லாம் விஜய், அஜித் என்று நடிகர்கள் புகைப்படத்தை வைத்திருக்க முத்துக்குமார் உலக அளவில் உள்ள உடல் அழகு போட்டியில் பட்டம் வென்ற மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுனீத் ஜாதவ் படத்தை பர்சிலும், வீட்டிலும் வைத்திருக்கிறார். அவர் தான் தனக்கு முன்மாதிரி என்றும் சொல்கிறார்.

சுனீத் ஜாதவ் போலவே தானும் மிகசிறந்த உடற்கட்டு உள்ளவராக வேண்டும் என்ற ஆசையில், மாதம் 500 ரூபாய் பணம்கட்டி ஜிம்முக்கு போனார் முத்துக்குமார். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். ஏகலைவன் போல தானாகவே கற்றுக் கொண்டவருக்கு, இன்னின்ன பயிற்சிகளை செய்யும்படி சிலர் வழிகாட்டினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக உடல் வடிவம் பெற்றது அதை வைத்து கல்லூரியில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்றார் அது இரண்டாம் இடத்துக்கு வந்தது முத்துக்குமாருக்கு புது நம்பிக்கையை கொடுத்தது.

இதற்குப் பிறகு முட்டை உள்ளிட்ட சில சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் பலமானார். தினமும் எட்டு மணி நேரத்தை ஜிம்மில் கழிக்க ஆரம்பித்தார். அடுத்ததாக திருச்சியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டவருக்கு தங்கப்பதக்கம் வசமானது. இதனால் நம்பிக்கை இன்னும் கூட பயிற்சிகளும் கூடினர். மார்த்தாண்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெற்ற ‘மிஸ்டர் தமிழ்நாடு’ போட்டியில் பெரும் சிரமப்பட்டு கலந்து கொண்டார். அங்கு இவருக்கே முதல் பரிசு கைவசமானது.

தொடர் வெற்றிகளால் முத்துக்குமாரின் கனவு இன்னும் விசாலமாக இருக்கிறது. 2022-ல் நடக்கவிருக்கும் ‘மிஸ்டர் இந்தியா’ போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தவியாய் தவிக்கிறார் முத்துக்குமார். அதற்காக தினமும் 10 மணி நேரம் வரை மிக கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

ஆனால் என்னதான் அவர் பயிற்சிகளில் மெனகிட்டாலும் வறுமை அவரை அடுத்த கட்டத்துக்கு முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறது. முத்துக்குமார் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் அவருக்கு ஆரோக்கியமான சத்தான உணவு தேவை. நவீன உடற்பயிற்சிக் கருவிகளும், உடற்பயிற்சிக்கூடம் தேவை. தகுதி போட்டிகளுக்கு சென்று வர பணம் தேவை. ஆனால் வெற்றி பெற முடியும் என்ற மன உறுதியை தவிர, மற்ற எதுவும் இன்றைய தேதியில் முத்துக்குமாரிடம் இல்லை.

அதை நம்மிடம் கவலையோடு பகிர்ந்து கொண்ட அவர், “மார்த்தாண்டம் போட்டிக்கு தயாராகவும், போட்டிக்கு சென்று வரவுமே ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. தங்கையின் திருமணத்திற்காக பெற்றோர் வாங்கி வைத்திருந்த சிறு நகையை விற்று தான் அதில் கலந்து கொண்டேன். நகையை விற்றுமே செலவுக்கு போதவில்லை. எனது டூவீலரை அடமானம் வைத்து சமாளித்தேன்.

‘ மிஸ்டர் இந்தியா’ போட்டிக்கான தகுதிசுற்று டிசம்பர் இறுதியில் சென்னையில் நடக்கிறது. அதற்கான பயிற்சியில் தான் இப்போது இருக்கிறேன். புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ள உணவு அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் மட்டன் அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் என்னிடம் அதற்கு கூட வசதி இல்லை. அதனால் விலை குறைவாக கிடைக்கும் மாட்டுக்கறியை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிடுகிறேன். அதிக நேரம் பயிற்சியில் இருப்பதால் தற்போது வேலைக்கு போக முடியவில்லை. அதனால் செலவுக்கு இன்னும் நெருக்கடியாக இருக்கிறது. அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்கு போய் சம்பாதிக்கும் ஆயிரம், இரண்டாயிரம் தருகிறார்கள். அதை வைத்து சமாளிகிறேன்.

யார் மூலமாவது உதவி பெற்று சென்னையில் நடைபெறும் போட்டிக்கு சென்று விட்டால், தகுதிப் போட்டியில் நிச்சயம் தேர்வாகி விடுவேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதில் தேர்வாகிவிட்டால் அடுத்ததாக ஏதாவது ஒரு மாநிலத்தில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான தகுதி போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதிலும் தேர்வானால் தான் அடுத்ததாக ‘மிஸ்டர் இந்தியா’ போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதற்கெல்லாம் பணத்துக்கு என்ன வழி என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

என்னுடைய இப்போதைய குறிக்கோள் ‘மிஸ்டர் இந்தியா’ எனக்கு போதிய பயிற்சியும் ஆதரவும் கிடைத்தால் அதையும் தாண்டி உலக அளவில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தரவும் என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் சொன்னார்.

அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலையிலும் தன்னால் இந்தியாவின் ஆணழகன் ஆகிவிட முடியும் என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார் முத்துக்குமார். அரசோ தன்னார்வலர்களோ ஆதரவுக்கரம் நீட்டினால் அவரின் கனவை நனவாக்கலாம்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page