3rd December 2021

கிராமத்தில் களைகட்டிய மகளிர் தினவிழா கொண்டாட்டம்!

கிராமத்தில் களைகட்டிய மகளிர் தினவிழா கொண்டாட்டம்! நூற்றுக் கணக்கான பெண்களுக்கு பொன்னாடை அணிவித்து பெண்களுக்கு பெருமை சேர்த்த பழைய கூடலூர் ஊராட்சி நிர்வாகம்.

நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பழையகூடலூர் ஊராட்சியில் உலக மகளிர்தின விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் இரா.பாண்டியன் தலைமை வகித்தார். பேராவூர் ஊராட்சி மன்றத்தலைவர் மாலா நாகேஸ்வரன், கொக்கூர் ஊராட்சிமன்றத் தலைவர் கவிதா சின்னகுமார், மேக்கிரிமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் ஞானசேகரன், சென்னியநல்லூர் ஊராட்சிமன்றத்தலைவர் புவனேஸ்வரி ராஜசேகர், திருவாலங்காடு ஊராட்சிமன்றத் தலைவர் சின்னையன்,பழையகூடலூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜீவராணி நாகுரான், உஷா செல்வராஜ், இராமநாதன்,சாந்தகுமாரி இளங்கோவன்,முத்துலட்சுமி குமார்,செந்தமிழ்ச்செல்வி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை அருண் பிரியா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் இரா.செல்வம், குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன்,காவல்துறை இணை ஆணையர் ரவி, குத்தாலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து, ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பெண்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில், கனவு ஆசிரியர் கவிஞர் வீதி.முத்துக்கணியன், பட்டிமன்ற பேச்சாளர் சமய இலக்கிய மாமணி நாகை வேம்புபாலாஆகியோர் பெண்களுக்கு தன்னம்பிக்கை புத்தாக்க சிறப்புரையாற்றினர்.

விழாவில் பழையகூடலூர் முன்னாள் பெண் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சாதனை மகளிருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் ஊராட்சி சார்பில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பேச்சு, பாடல் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. இதில் பழையகூடலூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சிமன்றத் தலைவர் இரா.பாண்டியன் தலைமையில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

Advertisement

Leave a Reply

You cannot copy content of this page