3rd December 2021

யோகாவில் உலக சாதனை படைத்த மயிலாடுதுறை பள்ளி மாணவர்

மயிலாடுதுறை குட்சமாரிட்டன் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.எஸ்.சந்தோஷ் ஒரு நிமிடத்தில் 52 பந்துகளை பூர்ணா சலபாசனாயோகா மூலம் கால்களால் எடுத்து வீசி சாதனை படைத்துள்ளார்.

யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் அனிதா ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் ஆர்.அலெக்ஸாண்டர், ஹெஃப்லின் ஐசாயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கே.மகாலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். யோகா பயிற்றுநர் டி.எஸ்.ஆர்.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அப்பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவன் சந்தோஷ் பூர்ணா சலபாசனா யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 52 பந்துகளை ஒரு திசையில் இருந்து எதிர் திசைக்கு கால்களால் எடுத்து வீசி உலக சாதனை படைத்தார். மாணவரின் சாதனையை யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆப் ரெக்காட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் அமைப்புகளை சேர்ந்த பாபு பாலகிருஷ்ணன், உமா ஆகியோர் பதிவு செய்தனர். முடிவில் பள்ளி யோகா பயிற்சி ஆசிரியை பிரசன்னா தேவி நன்றி தெறிவித்தார்.

Leave a Reply

You cannot copy content of this page