மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் சிறந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ‘நற்றுணை விருது’ வழங்கும் பிரமாண்ட விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 120 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு, நற்பண்புகளை வளர்த்தல் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு பங்காற்றியமைக்காக இந்த உயரிய விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இத்தகைய அங்கீகாரங்கள் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்க ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பையும் உற்சாகத்தையும் அளிக்கும் என விழாவில் உரையாற்றியவர்கள் தெரிவித்தனர்.


