மாநில வுஷு போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பதக்கம் வென்றனர்
23வது சப் ஜூனியர் தமிழ்நாடு மாநில வுஷு போட்டி தென்காசி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக தீக்சன், பூவிகா, தர்ஷன், ஸ்ரீ நிரஞ்சன், அர்ஜுன் மற்றும் கோபிகா ஆகிய ஆறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தீக்சன் மற்றும் பூவிகா ஆகியோர் தலா ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் இரண்டு பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் மற்றும் அவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மயிலாடுதுறை மாவட்ட வுஷு சங்கத்தின் செயலாளரும் மாவட்ட வுஷு அணியின் பயிற்சியாளருமான கதிரவன் அவர்களையும் மாவட்ட வுஷு சங்க தலைவர் ஏடிஎஸ் சுதாகர் வாழ்த்தினார்


