அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்

இறைவன்:உமாமகேஸ்வரர்                              
இறைவி:அங்கவளநாயகி
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம் 
பாடியோர்:சம்பந்தர்      

தேவாரம்:   

கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த
வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லா னமையாள்வா னல்ல நகரானே

 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

கும்பகோணம் காரைக்கால்  சாலையில் 20.கி.மீ. தொலைவில் உள்ள S.புதூர்  என்னும் ஊரிலிருந்து 1.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து  பேருந்துகள் உள்ளன. 

 

தங்கும் வசதி:

கும்பகோணத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00

 

கோயிலின் முகவரி:

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்,  மயிலாடுதுறை மாவட்டம் 612201.

 

தொலைபேசி:

0435 – 2449830