முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (3.3.2025) நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து , புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து , முதலமைச்சர் அவர்கள், நாகப்பட்டினம், நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகம் 34.30 கோடி செலவில் படகு இறங்குதளம் , படகு அணைசுவர், தெற்கு மற்றும் வடக்கு பக்க அலைதடுப்பு சுவர்கள், முகத்துவாராம் ஆழப்படுதுதல் , தடுப்பு சுவர் மற்றும்
தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு 9.3.௨௦௨௩ அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் , நம்பியார் நகர் சிறிய மீன்பிடித் துறைமுகத்தில் 700 மீட்டர் கடல் அரிமானம் ஏற்பட்டு உள்ளதை தடுப்பதற்காக கூடுதலாக 4 நேர்கல் சுவர் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 8.3.2024 முதலமைச்சர் அவர்கைால் திறந்துக்கப்பட்டது.
நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்தில் மீனவப் பெருமக்களை முதலமைச்சர் அவர்கள் சந்தித்தார், அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார் . அப்போது மீனவர்கள், முதலமைச்சர் அவர்களிடம் சுனாமி குடியிருப்புகளை சீர்செய்து தர வேண்டும் என்றும், வங்கி கடனுதவிகளை தள்ளுபடி செய்திட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர் . அப்போது , முதலமைச்சர் அவர்கள், மீனவர்களின் கோரிக்கைகளை மீது உரிய நடவடிக்ளக எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், நம்பியார் நகரிலுள்ள நகராட்சி நடுநிலை பள்ளி சிறுவர், சிறுமியர்கள் அளித்த உற்சாக வரவேற்பினை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டு , அச்சிறுவர், சிறுமியர்களுடன் உரையாடினார்.