மயிலாடுதுறை வட்டாரத்திற்கு உட்பட்ட உளுத்துகுப்பை கிராமத்தில், தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெற்ற பயனாளியை, “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து, வீடு பெற்றதற்கான மனதாரமான அனுபவங்களை கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின்போது, பயனாளியின் வாழ்க்கை தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பகிர்ந்து கேட்டார். இதற்கு பயனாளியும் மனமுவந்த பதில்களை அளித்தார்.
இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, சுதாகர், மற்றும் வட்டாட்சியர் சுகுமாரன் ஆகியோர் உடன் இருந்தனர்.