மயிலாடுதுறை வட்டம் சேந்தங்குடி பகுதியில் அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில் பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார்கள். உடன் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அவர்கள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன் அவர்கள், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் அவர்கள், உதவி ஆணையர் ரவிசந்திரன் அவர்கள், மயிலாடுதுறை நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார் அவர்கள் உள்ளனர்