மயிலாடுதுறையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் சார்பில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா அருள்மிகு மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது.
சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு துணை தலைவர் சிவலிங்கம், அறங்காவலர்கள் சங்கரி பரசுராமன், தொழிலதிபர்கள் அழகேசன், ஏஆர்சி குருகோவிந்த், ஏசிடி செந்தில்குமார், கங்காதர், திரை இயக்குநர் மணிவண்ணன், ரோட்டரி சங்க தலைர் அய்யாசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விஜயபாஸ்கரன், மருத்துவர்கள் ராதை பிரசன்னவதனன், பரணிதரன், சரிதா, சிவபுரம் வேதசிவாகம பாடசாலை சுவாமிநாத சிவச்சாரியார், கீழையூர் செந்தில், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை தலைவர் இசைக்கலைமணி பரணிதரன், அறக்கட்டளை செயலாளர் வாத்திய கலைமணி மாயவரம் விஸ்வநாதன், துணை செயலாளர் அகஸ்டின் விஜய், பொருளாளர் ராமன், நிர்வாகிகள் சிவக்குமார், ஹரிஹரன், அரவிந்த், அகோரம், அருணா, பவித்ரா, மகாலெட்சுமி, சுரேஷ், மோகன்ராஜ், ஞானம், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழாவில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் கலை மற்றும் இசைத் துறையில் சிறந்து விளங்கி வரும் தேனி சுபஸ்ரீ சசிதரனுக்கு மயூர நாட்டிய தாரகை விருதும், புதுவை பாலாஜி ராம்ஜிக்கு மயூர கான கலைமணி விருதும் வழங்கி பாராட்டப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற மகா சிவராத்திரி மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கோவை ஸ்ரீகார்த்திகேயா நாட்டியப்பள்ளி, லண்டன் சேஷா நாட்டிய நிக்கேதன், சென்னை நிருத்யோபாசனா பரதநாட்டியம் கலை நிலையம், மலேசியா ஸ்ரீ சங்கர் கந்தசுவாமி, தேனி ப்ரஜ்னா ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், கோவை ஸ்ரீ அபிராமி நாட்டியாலயா, பெங்களூர் வைஷ்ணவி நாட்டியஷாலா, மலேசியா லாஸ்யா ஆர்ட்ஸ், ஸ்ரீலங்கா அபிநயா க்ஷேத்ரா, சென்னை நிருத்யபாயாசா ஸ்கூல் ஆஃப் கிளாசிக்கல் டான்ஸ் & மியூசிக், கோவை சாத்விகா ஸ்கூல் ஆஃப் டான்ஸ், செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா
உள்ளிட்ட குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான நாட்டியக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு நாட்கள் நடைபெற்ற 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழாவிற்கான ஏற்பாடுகளை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.





