சீர்காழி: அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் – வேட்பாளர் உறுதி

அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்

சீர்காழி அதிமுக வேட்பாளர் சக்தி தேர்தல் பிரச்சாரம்

சீர்காழி, ஏப். 11: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம. சக்தி, சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மங்குடி, தில்லைவிடங்கன், திட்டை, எடக்குடி வடபாதி உள்ளிட்ட ஊராட்சிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்படுத்தினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன்:

  • குலவிளக்குத் திட்டம் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 2,000 வழங்கப்படும்.

  • 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்.

  • மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

  • அம்மா இல்லம் திட்டம் சார்பில் காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும். கடந்த கால அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவினை ஆதரிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கதிராமங்கலம், கன்னியாகுடி, திருப்புன்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி, மருதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்பொழுது அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் நாடி மர்மல்லன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரமோகன், பூராசாமி, பேரூர் கழக செயலாளர் போகர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் திருமாறன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நடராஜன், விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அசோகன், அஞ்சம்மாள் இளங்கோவன், மதியழகன், அலெக்சாண்டர், முன்னாள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்வமுத்துக்குமார், பாமக தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், அதிமுக நிர்வாகிகள் கொண்டல் பாண்டியன், பாலதண்டாயுதம், உமையாள்பதி ரவி, கல்யாணசுந்தரம், ராஜ்மோகன் சந்திரசேகர், மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் பாலாஜி, தியாகராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.