மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மயிலாடுதுறை துலாக்கட்ட காவேரியை தூய்மைப்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

மயிலை மார்ச் 07
மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி மிகவும் புனிதமான பகுதியாகும். குறிப்பாக ஜீவநதி கங்கையின் பாவத்தை போக்குவதற்கு சிவபெருமானிடம் வேண்டிய பொழுது ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை துலாக் கட்ட காவீரியில் நீராடுகின்ற பொழுது உனது பாவங்கள் போக்கப்படும் என்ற வரம் கொடுக்கப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் கலந்து கொண்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவேரியில் புனித நீராடுவார்கள். கடந்த 2017ல் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்ற காவேரி மகா புஷ்கர விழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மாசிமகத்தை முன்னிட்டு வரும் 12 தேதி புதன்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் துலாக்கட்ட காவேரிக்கு வருகைதந்து புனித நீராடி முன்னோர் களை நினைவு கூறவும் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு ஏதுவாக கட்டத்தை துமைப்படுத்த வேண்டும். தற்பொழுது அப்பகுதியில் தேங்கிலுள்ள குப்பை குலங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும், மேலும் தற்பொழுது காவேரியில் தண்ணீர் இல்லாமல் காணப்படுவதால், பக்தர்கள் புனித நீராடிட வசதியாக புஷ்பகர காலத்தில் அமைக்கப்பட்ட போர்வெல் நீர்முழுகி மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து புஷ்கர் நிரப்பிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் விடுத்துள்ளார்.