இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 6 – 2024 வெள்ளிக்கிழமை

மேஷம்
தாமதமான காரியத்தை தடாலடியாக நடத்துவீர்கள். அரசாங்க வேலைக்கு அப்ளிகேஷன் போடுவீர்கள். சகோதர சகோதரிகளின் தொந்தரவால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்கள். மனைவியின் மனதிற்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வீர்கள். இடையூறுகளைத் தாண்டி வியாபாரத்தை நல்ல முறையில் நடத்தி வருமானத்தை அதிகரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்
துணிவோடு தொழிலை நடத்தி போட்டியாளர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். பழுதான மின்சார சாதனங்களை ரிப்பேர் செய்வீர்கள். வியாபாரத்திற்காக வங்கியில் இருந்து பணம் பெறுவீர்கள். பிரிந்து போன உறவுகளை தேடிப்பிடித்து சமாதானப்படுத்துவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்
வெட்டித்தனமாக பேசி வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பிறந்த வீட்டுக்கு கோபத்தில் சென்ற மனைவியை சமாதானப்படுத்தி கூட்டி வருவீர்கள். தந்தையாரின் மூட்டு வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பீர்கள். வண்டி வாகனங்களை செல்போன் பேசிக்கொண்டே ஓட்டாதீர்கள். சகோதர சகோதரிகளின் புரிந்து கொள்ளாத நிலையால் வேதனைப்படுவீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்
நீண்ட நாள் பகையை விலக்கி உறவுகளை பலப்படுத்துவீர்கள். சாதுர்யமாகப் பேசி மனைவியைச் சமாளிப்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள். தக்க நேரத்தில் கிடைக்கும் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்
ஒதுங்கி போனாலும் உறவுகளின் தொல்லைக்கு ஆளாவீர்கள். மனத்திண்மையால் அதை முறியடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற கடினமாக உழைப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். கொடுத்த கடனை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். வியாபாரம் சற்று மந்த நிலையை காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி
ஏதோ ஒரு மனக் கவலையால் இரவில் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். வியாபாரத்தில் இடையூறுகளை சந்திப்பீர்கள். தொழிலில் முன்னேறி மரியாதையை அதிகரிப்பீர்கள். காதலிக்கு பட்டுச்சேலை வாங்கி பரிசளிப்பீர்கள். முக்கிய வேலை காரணமாக வெளியூர் செல்வீர்கள். வியாபாரத்திற்கான பற்றாக்குறையை தவிர்க்க நண்பரிடம் உதவி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்
மடை கடந்த வெள்ளம் போல் பலவகையில் வருமானம் பெறுவீர்கள். வாகனங்களுக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள். பூர்வீகச் சொத்தை அடைய தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். உறவினர் பிரச்சனையை சாதுரியமாக பேசி தீர்த்து வைப்பீர்கள். தோட்டப் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தென்னந்தோப்பை சீர்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்
பழைய நண்பர்களின் வருகையால் மனம் குதூகலித்து மகிழ்வீர்கள். மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்குவீர்கள். திருமண பேச்சு வார்த்தைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்தியை புகுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். தொழிலாளர்களின் முழு ஒத்துழைப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு
தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். ஏழை எளியோருக்கு உதவுவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களின் புகழை அதிகரிப்பீர்கள். எதிர்ப்புகளை இருந்த இடம் தெரியாமல் விரட்டுவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் தொழிற்சாலையில் லாபத்தை அதிகரிப்பீர்கள். விடாமுயற்சியால் வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்
வாகனங்கள் பழுதாகி குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். மனைவி மக்களின் ஆசையை நிறைவேற்ற ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். கடன் வாங்கி சில அத்தியாவசிய காரியங்களைச் செய்ய நினைப்பீர்கள். வேலை இடங்களில் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். வியாபாரம் சுமாராக நடக்கும். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்
வாகனங்களில் போகும்போது அலட்சியம் காட்டாதீர்கள். மோட்டார் சைக்கிளில் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல மறக்காதீர்கள். ஞாபக மறதியால் நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். எந்த இடத்தில் எதை வைக்கிறோம் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் தடுமாற்றம் அடைய மாட்டீர்கள். என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் திட்டமிட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்
பங்குச்சந்தையில் முதலீடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை நல்ல முறையில் நடத்துவீர்கள். வாங்கிப்போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடிந்து சந்தோசப்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி பெறுவீர்கள். வேலை இடங்களில் மரியாதையை உயர்த்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5