செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமல்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 02.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திருமதி.ஆந்தாயி (வயது 71) க/பெ.முத்தன், திருமதி.லோகம்மாள் (வயது 56) க/பெ.சின்ராஜ், திருமதி.யசோதா (வயத 54) க/பெ.கோவிந்தசாமி, திருமதி.விஜயா (வயது 53) க/பெ.சாமிநாதன் மற்றும் திருமதி.கௌரி (வயது 52) க/பெ.குப்பன் ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த TN11 J 7270 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Top News
-
சீர்காழி: அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் – வேட்பாளர் உறுதி
-
நடுக்கடலில் பரப்புரை! மீனவர்களை ஆச்சரியப்படுத்திய பூம்புகார் நாம் தமிழர் வேட்பாளர்!
-
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி: மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
-
வாகன சோதனையில் ரூ.83,490 பறிமுதல்: சீர்காழி தேர்தல் பறக்கும் படை அதிரடி!
-
தரங்கம்பாடி பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்: போதிய மகசூல் இன்றி விவசாயிகள் கவலை!

