உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் ஊராட்சியில் குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்படுவதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.