சவூதி அரேபியா நாட்டில் Telecom Projectsல் பணிபுரிய Auto CAD & GIS Designer for Telecom Projects, MEP Pre Sales Engineer, Site Supevisor/Telecom OSP works, Microwave Technician, Microwave Riggers, Inbuilding Solution, Fiber Optic (FOC) Technician மற்றும் Arabic English Translator பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்

Bachelor/Diploma in Telecommunication மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5 வருட பணி அனுபவத்துடன் 25 முதல் 44 வயதுக்கு உட்பட்ட ட Auto CAD & GIS Designer ரூ.41,000/- , MEP Pre Sales Engineer ரூ.80,000/- , Site Supevisor (Telecom OSP Works) ரூ.50,000/- , Microwave Technician ரூ.55,000/-, Microwave Riggers ரூ.55,000/-, Inbuilding Solution ரூ.57,000/-, Fiber Optic (FOC) Technician ரூ.46,000/- மற்றும் Arabic English Translator ரூ.46,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemcinm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 25.03.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலை தளமான www.omcmanpower.tn.gov.in. தொலைபேசி எண்கள்(044-22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைக்கட்டணமாக இந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். ரூ.35,400/-மட்டும்