தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 21-ஆம் தேதி தொடங்கியது.
📅 இன்று ஏப்ரல் 21 விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔹 மொத்த பணியிடங்கள்: 3,274
🔹 பணி வகை: ஓட்டுநர் மற்றும் நடத்துநர்
🔹 விண்ணப்ப முடிவு தேதி: இன்று – ஏப்ரல் 21
தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்களில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,274 பணியிடங்கள் மாநிலம் முழுவதும் நிரப்பப்பட இருக்கின்றன.
🔹 பகுதி வாரியான காலியிடங்கள்:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364 இடங்கள்
அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318 இடங்கள்
விழுப்புரம் போக்குவரத்து கழகம் – 322 இடங்கள்
சேலம் போக்குவரத்து கழகம் – 486 இடங்கள்
கோயம்புத்தூர் போக்குவரத்து கழகம் – 344 இடங்கள்
கும்பகோணம் போக்குவரத்து கழகம் – 756 இடங்கள்
மதுரை போக்குவரத்து கழகம் – 322 இடங்கள்
திருநெல்வேலி போக்குவரத்து கழகம் – 362 இடங்கள்
📌 விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:
🔗 arasubus.tn.gov.inபணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
TNSTC ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள்:
🔹 வயது: 01.07.2025 தேதிக்குள் 24 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்
🔹 கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி + தமிழில் எழுத & படிக்க தெரிந்திருக்க வேண்டும்
🔹 உரிமங்கள்:
🔸 செல்லத்தக்க வாகன ஓட்டுனர் உரிமம்
🔸 கனரக வாகன அனுபவம் – குறைந்தது 18 மாதங்கள்
🔸 நடத்துநர் உரிமம் – 01.01.2025க்குள் பெற்றிருக்க வேண்டும்
🔹 உயரம்: குறைந்தபட்சம் 150 செ.மீ
🔹 எடை: குறைந்தபட்சம் 50 கிலோ
🔹 விழிப்புணர்வான பார்வை, உடல் குறைபாடுகள் இல்லாதவர்.