“மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இனியும் நான் பொறுமையாக இருந்தால் , அது எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் மற்றும் தொண்டர்களுக்கு நான் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். கட்சி அழியக்கூடாது, மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வாருங்கள். அதிமுக தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம். ஒற்றுமையாக இருந்தால் யாரும் நம்மை வீழ்த்த முடியாது” என சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை. தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், இனி வரும் காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.