இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில்  ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB)ரூ. 349 -ஆக உயர்கிறது.  365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB)என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.