மே 14: சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை 14.05.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

  • வைத்தீஸ்வரன்கோவில்

  • சீர்காழி முழுவதும்

  • புங்கனூர்

  • சட்டநாதபுரம்

  • மேலச்சாலை

  • கதிராமங்கலம்

  • ஆத்துக்குடி

  • திருப்புங்கூர்

  • தென்பாதி

  • பனமங்கலம்

  • கோவில்பத்து

  • கொள்ளிடம் முக்கூட்டு

  • விளந்திட சமுத்திரம்

  • புளிச்சக்காடு

  • கற்பகம் நகர்

  • புதிய பேருந்து நிலையம்

  • பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்

மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது மின்சாரத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.