மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைந்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

“சட்டப்படி மத்திய அரசுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்றும், சில புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது என்பதால், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கல்வி பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சம உரிமையும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய அரசு எடுக்கும் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி தர வேண்டும் கேட்டுக்கொண்டார். அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்று தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.