கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 60 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏசுதாஸ் (35) உயிரிழந்துள்ளார். விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 61 ஆக உயர்ந்துள்ளது.