தொலை தொடர்பு சேவைக்கான 10-வது அலைக்கற்றைகளை (ஸ்பெக்டரம்) தொலை தொடர்பு துறை நேற்று ஏலத்தை  தொடங்கிய நிலையில்  ரூ,96 ஆயிரம் கோடி மதிப்பிலான 10,500 மெகா ஹெர்ட்ஸ் அலைபேசி சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல். வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்று அலைக்கற்றையை ஏலம் எடுப்பதற்கு  ரிலையன்ஸ் ஜியோ ரூ.3,000 கோடி, பார்தி ஏர்டெல் ரூ.1,050 கோடி, வோடஃபோன் ஐடியா ரூ.300 கோடி வைப்புத் தொகை செலுத்தியுள்ளன.

தொலை தொடர்பு  சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் முதன்முறையாக 2010-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கடைசியாக 2022-ம் ஆண்டு அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில் முதன்முறையாக 5ஜி சேவைகளுக்கான ரேடியோ அலைகளும் இடம்பெற்றன.

.