மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் பெற்ற மாவட்ட ஆட்சியர்

mayilai guru

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவினைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை அளித்தனர்.

இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து தங்கள் தேவைகள் மற்றும் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தனர். அவர்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர்  ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டு, அவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உடனடி உத்தரவுகளை வழங்கினார்.