🏆 இளம் வீரர்களுக்கான நிதியுதவி: 10 தமிழ்நாடு வீரர்களுக்கு ₹7 லட்சம் – துபேக்கு பாராட்டுகளின் மழை!

தமிழ்நாடு விளையாட்டுப் பத்திரிகையாளர் சங்கம் (TN Sports Journalists Association) நடத்திய 2024-25 நிதியுதவி வழங்கும் விழா, சென்னை சேப்பாக்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் இளம் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வில், CSK அணியின் CEO காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

சிறப்பு அதிதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சிவம் துபே கலந்து கொண்டு இளம் வீரர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தார். TNJA தலைவர் வெங்கட் அவர்களை வரவேற்றார். இவ்விழா, நமது மாநிலத்திலிருந்து விளையாட்டு உலகில் புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் பந்தயத்திற்கு உறுதுணையாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரர் சிவம் துபே, தமிழ்நாடு விளையாட்டுப் பத்திரிகையாளர் சங்கம் (TNJSA) நடத்திய விழாவில் பங்கேற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இளம் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.70,000 வீதம், மொத்தம் ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், “இது போன்ற உதவித் திட்டங்கள் தமிழ்நாடு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,” என்றார். வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அவரது செயலுக்கு  பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.