12வது, ITI, Diploma தேர்ச்சி…SSB மத்திய பாதுகாப்பு படையில் Head Constable வேலை – 233 காலியிடங்கள் || ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம்! SSB Head Constable Recruitment 2026

SSB Head Constable Recruitment 2026: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள 233 Head Constable (தலைமை கான்ஸ்டபிள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்

SSB Head Constable Recruitment 2026

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Sashastra Seema Bal
ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது சஷாஸ்த்ர சீமா
காலியிடங்கள்233
பணிHead Constable (தலைமை கான்ஸ்டபிள்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.04.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssb.gov.in/

SSB Head Constable Recruitment 2026 காலிப்பணியிடங்கள்

SSB Head Constable வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் (Post Name)காலியிடங்கள்
தலைமைக் காவலர் (Steward)02
தலைமைக் காவலர் (Communication)197
தலைமைக் காவலர் (Electrician)29
தலைமைக் காவலர் (Veterinary)05

SSB Recruitment 2026 கல்வித் தகுதி

பணியின் பெயர் (Post Name)கல்வித் தகுதி (Educational Qualification)
தலைமைக் காவலர் (Steward)12-ஆம் வகுப்பு + கேட்டரிங் டிப்ளோமா (2 ஆண்டுகள்) + 1 ஆண்டு பணி அனுபவம்.
தலைமைக் காவலர் (Communication)12-ஆம் வகுப்பு (Physics, Chemistry, Maths) அல்லது Electronics/CS/IT பிரிவில் 3 ஆண்டு டிப்ளோமா.
தலைமைக் காவலர் (Electrician)10-ஆம் வகுப்பு + ITI (Electrician) அல்லது 2 ஆண்டு பணி அனுபவம் + Trade Test-ல் தேர்ச்சி பெற வேண்டும்.
தலைமைக் காவலர் (Veterinary)12-ஆம் வகுப்பு (Biology ஒரு பாடமாக இருக்க வேண்டும்) + கால்நடை மருத்துவத்தில் 2 ஆண்டு டிப்ளோமா.

வயது வரம்பு விவரங்கள்

பணியின் பெயர் (Post Name)வயது வரம்பு (20.04.2026 அன்று)
தலைமைக் காவலர் (Steward)18 – 27 ஆண்டுகள்
தலைமைக் காவலர் (Communication)18 – 27 ஆண்டுகள்
தலைமைக் காவலர் (Electrician)18 – 25 ஆண்டுகள்
தலைமைக் காவலர் (Veterinary)18 – 27 ஆண்டுகள்

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டிய வயது வரம்பு தளர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • SC / ST பிரிவினர்: +5 ஆண்டுகள்
  • OBC (NCL) பிரிவினர்: +3 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwD – UR): +10 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwD – OBC): +13 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwD – SC/ST): +15 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர்: அரசு கொள்கைப்படி தளர்வு உண்டு.

SSB Head Constable Recruitment 2026 சம்பள விவரங்கள்

பணியின் பெயர் (Post Name)சம்பளம் (Pay Scale)
தலைமைக் காவலர் (Steward)₹25,500 – 81,100 (Level 4)
தலைமைக் காவலர் (Communication)₹25,500 – 81,100 (Level 4)
தலைமைக் காவலர் (Electrician)₹25,500 – 81,100 (Level 4)
தலைமைக் காவலர் (Veterinary)₹25,500 – 81,100 (Level 4)

SSB Recruitment 2026 தேர்வு செயல்முறை

CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 Assistant Commandant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test – PET)
  • உடற்தகுதித் தரத் தேர்வு (Physical Standard Test – PST)
  • கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
  • துறை சார்ந்த தேர்வு (Skill Test)
  • ஆவணங்கள் சரிபார்ப்பு & விரிவான மருத்துவப் பரிசோதனை (Detailed Medical Examination – DME)
  • மருத்துவப் பரிசோதனை மறுஆய்வு (Review Medical Examination – RME)
  • சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்:

  • பெண்/பழங்குடியினர்/பட்டியல் சாதியினர்/முன்னாள் ராணுவத்தினருக்கான விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 21.03.2026 
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2026 

SSB Head Constable Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:

SSB Head Constable வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.03.2026 முதல் 20.04.2026 தேதிக்குள் https://ssb.gov.in/ இணையதளத்தில் சென்று முதலில் Apply பட்டனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here