பொருளாதார மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

மயிலாடுதுறையில் தமிழர் முன்னேற்ற பேரவை சார்பாக பொருளாதார மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதனை ஒட்டி மயிலாடுதுறையில் அமைந்துள்ள அவரது திருவருவ சிலைக்கு தமிழர் முன்னேற்ற பேரவையின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் பார்த்திபன் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெனாசிர் பேகம் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவிஞர் பாலை மதியழகன் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அய்யா பிள்ளை மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் டெய்லர் மில்கியோன் குத்தாலம் ஒன்றிய தலைவர் பேராசிரியர் நேதாஜி திருவாரூர் மாவட்ட செயலாளர் பிரபு மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்