மயிலாடுதுறை தேர்தல் களம் 2026: மீண்டும் உதிக்குமா ‘கை’? 10-ஆம் சுற்று முடிவில் ஜமால் முகமது யூனுஸ் முன்னிலை!மயிலாடுதுறை | மே 4, 2026

மயிலாடுதுறை தேர்தல் களம் 2026: மீண்டும் உதிக்குமா ‘கை’? 10-ஆம் சுற்று முடிவில் ஜமால் முகமது யூனுஸ் முன்னிலை!
மயிலாடுதுறை | மே 4, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மயிலாடுதுறை (161) தொகுதி ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள 10-ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் தனது முன்னிலையை மேலும் அதிகரித்து வெற்றியை நோக்கி உறுதியாக முன்னேறி வருகிறார்.

10-ஆம் சுற்று முடிவில் நிலவரம்:
பத்தாம் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்க, பாமக மற்றும் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து சவாலாக உள்ளனர்.

வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்கு விவரங்கள்:
• ஜமால் முகமது யூனுஸ் (காங்கிரஸ்): 35,019 வாக்குகள்
• சித்தமல்லி பழனிசாமி (பாமக): 29,182 வாக்குகள்
• ஹாரூன் ரஷீத் (தவெக): 22,133 வாக்குகள்
• காசிராமன் (நாம் தமிழர் கட்சி): 3,143 வாக்குகள்

வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ், பாமக வேட்பாளரை விட 5,837 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பத்தாம் சுற்று வரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், மயிலாடுதுறையில் மீண்டும் “கை” சின்னத்தின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேசமயம், பாட்டாளி மக்கள் கட்சியின் சித்தமல்லி பழனிசாமி இரண்டாம் இடத்திலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஹாரூன் ரஷீத் மூன்றாம் இடத்திலும் கணிசமான வாக்குகளைப் பெற்று தொடர்ந்து போட்டியில் உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் காசிராமனும் தன் ஆதரவை பதிவு செய்து வருகிறார்.

வாக்கு எண்ணிக்கை இன்னும் பல சுற்றுகள் மீதமுள்ள நிலையில், இறுதி வெற்றியை தீர்மானிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது.

மயிலாடுதுறை தொகுதியின் முழுமையான மற்றும் துல்லியமான தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மயிலை குரு (Mayilai Guru) இணையதளத்துடன் இணைந்திருங்கள்.


நேரலைத் தகவல்களுக்கு: mayilaiguru.com
நமது குரல் – நமது நாடு!